Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சன் சீ கப்பல் மூலம் அண்மையில் கனடாவுக்கு சென்ற கர்ப்பிணிப் பெண் ஒருவரின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குடிவரவு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் பிரவச திகதி, செப்டம்பர் 25 ஆம் திகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவரின் அடுத்த விசாரணை திகதி செப்டம்பர் 17 ஆகும்.

விசாரணை திகதிக்கும் பிரசவ திகதிக்கும் இடையில் குறுகிய நாட்களே உள்ளமையால், அந்த பெண் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என அவரின் சட்டத்தரணி கனடாவின் குடிவரவு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

இந்த பெண் வன்கூவரில் இருந்து 70 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள அலோயிட்டே என்ற இடத்தில் உள்ள சீர்திருத்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

அவரின் கணவர், பிரேசர் என்ற இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விசாரணைகள் முடிவடையாவிட்டாலும் குறித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அது கனேடிய சட்டத்தின் கீழ் குடியுரிமையை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சன் சீ கப்பலில் கனடா சென்ற கர்ப்பிணி பெண்ணின் விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com