ஸ்ரீலங்காவில் போர் ஓய்ந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள போதும் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று 'சண்டே லீடர்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
வட பகுதிகளில் வாழ்ந்துவரும் பெண்களும் உயிர்வாழ்வதற்கான பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடும்துன்பத்திற்கு முகம்கொடுக்கும் இவர்கள் உயிர்வாழ்வுக்கான பெரும் சுமையினைத் தங்களது தோள்களில் சுமக்கிறார்கள்.
தங்களது பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியறிவினைப் புகட்டும் கடுமையான முனைப்புக்களில் இந்தக் குடும்பங்கள் ஈடுட்டிருக்கின்ற அதேநேரம் அங்கு போதிய நல்வாழ்வு வசதிகளோ அல்லது கல்வி வசதிகளோ இல்லாதிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
முகாம்களில் வாழ்ந்த பொதுமக்கள் தற்போது படிப்படியாக தற்காலிக கொட்டகைகளுக்கு இடம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பணமோ, உணவு நிவாரணமோ ஸ்ரீலங்கா அரசால் வழங்கப்பட்வில்லை. உயர் பாதுகாப்பு வலயங்களினுள் தமது வீடுகளைக் கொண்டவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஸ்ரீலங்கா அரசாங்கம் தமது நிலங்களை திருப்பித் தரும் என்ற நம்பிக்கையில் அம்மக்கள் வாழ்வதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தாயகப் பெண்கள் - உயிர் வாழ போராடுகின்றனர் என்கிறது சண்டே லீடர்