பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபான்ட் எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதியன்று லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்திக்கவுள்ளார்.
இதன் போது பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.
"தொழிலாளருக்கான தமிழர்" என்ற பெயரில் நடத்தப்படும் கூட்டத்தின் போதே மிலிபான்ட் தமிழர்களை சந்திக்கவுள்ளார்.
பிரித்தானியாவின் பொதுத்தேர்தலில் தொழில்கட்சி வெற்றி பெறுமானால் அந்த நாட்டின் பிரதமராக டேவிட் மிலிபான்டே தெரிவாவார்.
இந்தநிலையில் அவரின் ஆதரவு தமிழர்களுக்கு தேவை. அதேபோல மிலிபான்ட்டுக்கும் தமிழர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
டேவிட் மிலிபான்ட்டும் முன்னாள் பிரதமர் கோடன் பிரவுண் ஆகியோர் கடந்த பெப்ரவரி மாதம் லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களையே அவர்கள் சந்தித்தாக இலங்கையும் குற்றம் சுமத்தியிருந்ததுடன் அவர்கள் இருவருக்கும் விடுதலைப்புலிகளின் சீருடை அணிந்த மாதிரி சுவரொட்டிகள் ஒட்டி தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to டேவிட் மிலிபான்ட் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்திக்கிறார்