Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகள் பதில் காணப்படாமல் எஞ்சியிருப்பதாக பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் .நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற பி யாவிடை செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி எனும் தனது பதவிக் காலத்தின் போது இலங்கையில் மிகக் கடுமையான விவகாரங்களுக்கு .நா. முகம்கொடுத்ததாக ஜோன் ஹோம்ஸ் கூறினார்.

எனினும் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் குறிக்கோள் நோக்குடன் பரிந்துபேசும் பாத்திரத்தை .நா. வகித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் ஒருவரின் கேள்வியொன்றுக்கு ஜோன்ஸ் ஹோம்ஸ் பதிலளிக்கையில்,

யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவ முயற்சிக்கையில் அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பிரசாரங்களை சமநிலைப்படுத்த முயற்சித்தபோது .நா.கடும் அழுத்தங்களுக்கு உட்பட்டதாக கூறினார்.

யுத்தத்தின்பின் எதிர்பார்க்கப்பட்ட மிக மோசமான விடயம் இடம்பெறவில்லை.

இடம்பெயர்ந்த மக்களில் பெருமளவானோர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தத்தில், இலங்கையில் .நா. தனது மனிதாபிமான பணியில் தவறுகளைவிட அதிக சரியானவற்றை செய்ய முடிந்தது எனவும் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்தார்.

எனினும் பொதுமக்களின் சேதங்கள் உட்பட பல கேள்விகள் பதில் காணப்படாமல் எஞ்சியிருக்கின்றன என அவர் கூறினார்.

யுத்தத்தின்போது பொதுமக்கள் வசித்த பகுதிகளில் அரசாங்கம் ஷெல் தாக்குதலை நடத்தியதா என்பதும் அக்கேள்விகளில் ஒன்று என அவர் கூறினார்.

மூதூரில் .சி.எவ். தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to யுத்தம் முடிந்தும் பல கேள்விகளுக்குப் பதிலில்லை: ஜோன் ஹோம்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com