Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஜெர்மனியின் பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டமைக்கு சுவிற்ஸர்லாந்து விடுதலைப் புலிகள் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜகத் டயஸை உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிப்பதற்கு ஜெர்மனிய அரசாங்கம் அனுமதி வழங்கியதனால், அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் ஜெர்மனிய அரசாங்கத்திற்கு எதிராக சுவிற்ஸர்லாந்து விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக சுவிஸ் விடுதலைப் புலிகள் அமைப்பு பல்வேறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத் தளங்களில் வெளியான செய்திகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கைகளை ஆதாரம் காட்டி இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஜகத் டயஸின் நியமனத்திற்கு சுவிஸ் விடுதலைப் புலிகள் எதிர்ப்பு: திவயின

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com