நாம் தமிழர் என்னும் அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மற்றும் ஈழப்பிரச்சனை தொடர்பாக மிகவும் பரபரப்புடன் இயங்கிய சீமான் சிறையில் கடந்த ஒரு மாத காலமாக அடைக்கப்பட்டுள்ளார்.அவர் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது.
சீமானுக்கு நீண்ட காலமாக தமிழினம் தொடர்பான நூல் எழுதும் திட்டம் இருந்தது.ஆனால் அவருக்கு ஓய்வு கிடைக்க வில்லை. சிறையில் இருக்கும் தற்பொழுதைய நிலையில் பல்வேறு நூலைப் படிப்பதிலும் குறிப்புக்களை எடுப்பதிலும் முழுக்கவனம் செலுத்தும் அவர் தனது நூல் எழுதும் பணியையும் தொடங்கி உள்ளார்.
தமிழ் தேசியத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு,தமிழினம் ஏன் ஒடுக்கப்பட்டது? தமிழர்கள் எவ்வாறு தங்கள் இனத்தை மறந்தார்கள்,திராவிடம் எவ்வாறு தமிழினத்தை வீழ்த்தியது? என்பனவற்றை வரலாற்று செய்திகளுடன் மிகப்பெரிய ஆவணமாக எழுதி வருகின்றார்.அவர்
சீமானை முடக்க வேண்டும்,அவர் தமிழர்களுக்கு இன உணர்வு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே கருணா அரசின் திட்டம் ஆகும்.ஆனால் சீமானோ தன்னை தனிமைச்சிறையில் அடைத்தாலும் அங்கும் தமிழர்களின் நலனுக்காக நூல் எழுதுகின்றார்.
சீமானைச் சிறையில் நன்கு ஓய்வெடுக்கச் சொல்லுங்கள். புத்தகம் எழுதுவதை வெளியில் வந்த பின் பார்த்துக்கொள்ளலாம் என்று சீமானின் அம்மா, அவரது இளைய மகனிடம் சொல்லி அனுப்பியதற்கு, சீமான் சொன்ன பதில், ஓடாத மானும், போராடாத இனமும் வென்றதாகச் சரித்திரம் இல்லை என்று என் தலைவர் சொல்லி இருக்கின்றார்.
நான் என் தலைவர் சொன்ன படி போராடுகின்றேன்.சிறையில் நூல் எழுதுகின்றேன் என்பதாகும்.
இந்த நூல் சீமான் சிறையில் இருந்து வெளிவந்தபின் வெளிவரும் என்று தெரிகின்றது.

மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to வென்றது ஆரியம் துணைநின்றது திராவிடம்: சிறையிலிருந்து சீமான் எழுதும் புதிய நூல்