Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்த மாதத்திற்குள் யுத்த அகதிகள் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுவிடுவர் என்று அரசு அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்குப் பொறுப்பான விடயங்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசகராகப் பதவி வகிக்கும் சந்திரா பெர்னாண்டோ நேற்று ஊடகவியலாளர்களிடம் இதனைக் கூறியுள்ளார்.

அவர் இது குறித்து முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:

செப்ரெம்பர் மாத இறுதிப் பகுதிக்குள் மீள் குடியேற்றங்கள் அனைத்தும் பூர்த்தியாகி விடும் என நாம் நம்புகின்றோம். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 28 ஆயிரம் பேர் வரையானோரை மாத்திரம் அவரவர் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டியுள்ளது.

வட மாகாணத்தின் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 95 சதவீதமான மீள் குடியேற்றங்கள் பூர்த்தியாகி விட்டன.

உள்நாட்டு யுத்தங்களால் பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்திருக்கும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மிக வேகமாக அமைகின்றமை கண்கூடு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to அடுத்த மாதத்திற்குள் மீள்குடியேற்றம் நிறைவு பெறும்: சந்திரா பெர்னாண்டோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com