Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களுக்கான உணவைச் சமைப்பதற்கு அடுப்பு வைத்துத் தீ மூட்டக்கூடிய நிலை கூட அங்கு இல்லாமலுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏலவே குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல்வே நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். இந் நிலையில், தற்போது இந்தப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.

குடியேற்றம் என்ற போர்வையில் அந்த மக்கள் வெறும் கொட்டில்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அல்லது வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இங்கு இல்லை.

அவர்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ள இடங்கள் சதுப்பு நிலங்களாகவே உள்ளன. இவ்வாறானதொரு நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக அவர்கள் வாழும் இடங்கள் வெள்ளக் காடாகவே மாறும்.

இதனால் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

இவற்றினைத் தடுப்பதற்கான எற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்படாவிடின் அந்த மக்கள் மீண்டுமொரு இடப்பெயர்வுக்கு முகம் கொடுக்க நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to வன்னி மக்கள் மீண்டுமொரு இடப்பெயர்வைச் சந்திக்க நேரிடும்: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com