’சன் சீ’ கப்பலில் கனடாவை சென்றடைந்த 492 தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக கனடாவில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
விக்ரோரியாவில் உள்ள சென்ரெனியல் சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதனால் அங்கு வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்ரோரியாவில் உள்ள இனவாதத்துக்கு எதிரான வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40 வரையானோர் பங்குபற்றினர்.
அகதிகளை வரவேற்றும் வகையிலான முழக்கங்களை எழுப்பிய அவர்கள் வீதியில் தமது வாகனங்களை நிறுத்தி ஒலியெழுப்பினர்.
அகதிகள் தமது உரிமைகளுக்காக வாதிடுவதற்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கௌரவமாகவும், மரியாதையாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இனவாதத்துக்கு எதிரான வலையமைப்பைச் சேர்ந்த றோஸ் ஹென்றி என்பவர் தெரிவித்தார்.
இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை வன்கூவர், ரொரன்ரோ, மொன்றியல் போன்ற ஏனைய நகரங்களிலும் தமது அமைப்பு நடத்தப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கனடாவிற்கு கப்பலில் சென்ற அகதிகளுக்கு ஆதரவாக கனேடிய அமைப்பு ஆர்ப்பாட்டம்