இலங்கை தொடர்பிலான யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐக்கிய அமெரிக்காவின் சட்டவாக்குனர் குழு ஒன்று இந்த வலியறுத்தலை விடுத்துள்ளதாக ஏ.எப்.பீ செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டனுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இலங்கையின் யுத்தகுற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள எட்டு பேர் கொண்ட மாண்பு மிக்கோர் குழு நம்பிக்கைக்கு உரிய குழு இல்லை என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த மாண்புமிக்கோர் குழு விசாரணை மேற்கொள்ள காலம் தாழ்த்தியுள்ளதாகவும் இந்த குழுவில் நியமிக்கப்பட்டிருந்த பலர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி அனுப்பப்பட்டு நேற்று ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த கடிதத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் 57 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த யுத்த காலத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் யுத்தக்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன.
எனினும் இதுவரையில் முறையாக அந்த ஆதாரங்கள் பயன்படுத்தபபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க ஜானதிபதி இது தொடர்பில் தலையிட்டு உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர்கள் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். ஒபாமாவுக்கு அழுத்தம்