யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் ஜெனரல் சரத் பொன்சேக்கா ஆகியோரின் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவின் மூன்று சிப்பாய்களும் தற்போது அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் தனிப்பட்ட பணிகளில் ஈடுபடுத்தி வருவதாக தெரியவருகிறது.இந்த சிப்பாய்கள், அட்லாண்டாவில் உள்ள விக்ரமசூரியவின் வீட்டில் சமையல், பாதுகாப்பு மற்றும் சாரதியாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறித்த சிப்பாய்களுக்கு இராணுவத்தினால் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதனை தவிர இவர்களுக்காக ஜாலிய, தூதரகத்திலும் ஊதியத்தை பெற்றுக்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கோத்தபாய, பொன்சேகா பிள்ளைகளின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட படையினர் அமெரிக்காவில் செய்வது என்ன?