Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிஸ் ஈழத்தமிழர் அவையால் தமிழீழ முத்திரைகள் அதிகாரபூர்வமாக சிவந்தனின் நடைபயண இறுதி நாளான நேற்று வெளியிடப்பட்டுள்ளன. 1 பிராங் பெறுமதியான இம் முத்திரை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதனை வாங்கி தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போது அனுப்ப முடியும். சுவிஸ் அரசால் நடாத்தப்படும், தபால் சேவையில் இம் முத்திரைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது!

இம் முத்திரையில் இலங்கை அரசே இன அழிப்பை நிறுத்து என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, தமிழீழ தேசியப் பூ, முகாமில் அடைபட்டுள்ள மக்கள், முள்ளிவாய்க்கால் பேரவலம், என பலதரப்பட்ட சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், பார்க்கும் அனைவருக்கும், மற்றும் வேற்றின மக்களுக்கும் இலங்கை நிலை நன்கு புரியும்.

சுவிஸ் வாழ் ஈழத் தமிழர்கள், இதில் முன்னோடிகளாக இருப்பது பெருமைக்குரிய விடயமாகும். குறிப்பாக இளையோர்களில் நித்திலா தேய்வேந்திரன் அவர்கள் இம் முத்திரைகளை வடிவமைத்து, சட்ட அங்கீகாரங்களையும் பெற்றுள்ளமை பாராட்டுதலுக்கு உரியது.

சுவிஸ் வாழ் தமிழ் மக்கள், இனி தாம் அனுப்பும் கடிதங்களுக்கு தமிழீழ முத்திரைகளை ஒட்டி அனுப்பவேண்டும். இருப்பினும் இலங்கைக்கு கடிதங்களை அனுப்பும்போது, இதனைத் தவிர்த்துக்கொள்வது, நல்லது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும், உள்ளூருக்கும் கடிதங்களை அனுப்பும்போது, தமிழீழ முத்திரைகளையே சுவிஸ் வாழ் தமிழர்கள் பயன்படுத்தவேண்டும்.

சுவிஸ் ஈழத்தமிழர் அவை மிகவும் திறமையாகவும், நேர்த்தியாகவும் பல விடயங்களை முன்னெடுத்து வருகின்றது.

info@scet.ch இந்த மின் அஞ்சல் ஊடக முத்திரைகளைப் பெறலாம்.

http://www.scet.ch/



********************************


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

2 Responses to சுவிஸில் ஈழத்தமிழர் அவையால் வெளியிடப்பட்டுள்ள தமிழீழ முத்திரைகள்

  1. செய்யும் செயல் எதிலும் தனி முத்திரைப் பதிப்ப்பவர்கள் தமிழர்கள், அதிலும் குறிப்பாக
    ஈழத் தமிழர்கள். மறுபிறவி வேண்டும் எனக்கு ஈழத் தமிழனாய் பிறக்க

    அம்பலவாணன் தமிழ்நாடு தஞ்சை

     
  2. பார்த்திபன், தமிழ்நாடு‍

    தமிழ் ஈழ விடுதலைக்கான முயற்சிகளை புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்த வழியிலாவது‍ முயன்று‍ கொண்டே இருக்க வேண்டும், அதற்கு, மற்ற தமிழர்கள் எப்போதும் உறுதுனணயாக இருப்பார்கள், வாழ்த்துக்கள்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com