நீங்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பு, அதன் வெற்றிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நாம் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலண்டன் மாநகரிலிருந்து ஜெனீவா வரையிலான 1000 கிலோ மீற்றர் தூரத்தினைக் கொண்ட 'நீதிக்கான நடை' என்கிற கடும் நடைப் பயணத்தினை மேற்கொண்டதன் மூலம், ஈழத் தமிழ் மக்கள் உண்மை நிலையை ஒரு தனி மனிதனால் கூட ,உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும் என்பதை இந்த உலகத்திற்கும், குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கும், காட்டியிருக்கின்றீர்கள்.
*இலங்கை அரசினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மானுடத்திற்கெதிரான முறையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களிற்கான சுதந்திரமான சர்வதேச விசாரணை
*சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பார்வையிடுவதற்கான படிமுறைகள், போரினால் இடம் பெயர்ந்து நிர்க்கதி நிலையில் உள்ள தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல்
*இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மதிக்கும்வரை அதனை பகிஷ்கரித்தல்
என்கிற உங்கள் தீர்மானங்களை நாம் உறுதியாக ஆதரிக்கின்றோம். உங்களால் முன்வைக்கப்பட்ட இத் தீர்மானங்கள் அதன் இலக்கினை எட்ட, சர்வதேச சமூகம் தனது ஆதரவினை வழங்கும் என்று நாம் எதிபார்க்கின்றோம்.
நீங்கள் மேற்கொண்ட இந் நடவடிக்கை எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் சமுதாயத்தினை, எமது விடுதலையை நோக்கி இட்டுச் செல்லும் வழிகாட்டியாக இருக்கும்.
இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் அனைத்துலக ஈழத் தமிழ் மக்கள் சார்பில் உங்கள் முயற்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிறைந்த வாழ்த்துக்களுடன்...
பேராசிரியர்.E.A செல்வநாதன் - ஒருங்கு கூட்டுனர்
பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக் குழு.
திரு.டிலக்ஷன் மொரிஸ் - ஒருங்கு கூட்டுனர்
இனஒழிப்பு, போர்க்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான குழு.
திரு.எம்.இரத்னா - ஒருங்கு கூட்டுனர்
இடம்பெயர்ந்தோர், ஏதிலிகள் பற்றிய குழு.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to சிவந்தன் அவர்கட்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து