சிறீலங்காவின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் அடுத்த மாதம் 15ஆம் நாள்வரை நாட்டைவிட்டு வெளியேசெல்லக்கூடாது என்ற கடுமையான உத்தரவு அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எற்கனவே இது பற்றி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளுக்கும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நாடாளுமன்றம் ஆரம்பிக்கும்போது அரசியல் அமைப்பு மாற்றத்திற்கான வரைபை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும், அதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறும் நடவடிக்கைகளையும் சிறீலங்கா அரசு மிக வேகமாக முன்னெடுத்திருக்கின்றது.
இந்த அரசியல் அமைப்பு மாற்றத்திற்கான வரைபு எதிர்வரும் 30ஆம் நாள் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் எனவும் மேலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறீலங்கா அரசின் இந்த முனைப்பு தொடர்பாக தாம் முன்னரே அறிந்திருப்பதாக, கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில்பேசிய ஜே.வி.பியின் செயலர் ரில்வின் சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசுடன் இணைந்து பேச்சுக்களை நடத்திவரும் ஐக்கிய தேசியக் கட்சியையும் அவர் கடுமையாகச் சாடியிருக்கின்றார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேசெல்லக்கூடாது