Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுதந்திரம் அடைந்த இலங்கையில் சமாதானமே நிலவி வருவதாக நினைத்து புலத்தில் இருக்கும் தமிழர்கள் இலங்கைக்கு விடுமுறையில் சென்று வருவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்படுகின்றது.

திருகோணமலையில் சமாதானமும் சகச நிலையும் வந்துவிட்டது என்று நினைத்து சுவிஸில் வசித்து வந்த கந்தையா சிவபாலன் குடும்பத்தினர் திருகோணமலைக்கு சென்றனர். ஆனால் அங்கே அவரை குறிவைத்து யுத்தம் நடந்த காலத்தில் நடப்பதைப் போல் தலைக்கவசம்(Helmet) அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு 8909 என்னும் இலக்கத்தை உடைய மோட்டார் சைக்கிளில் வந்தோரால் 02.08.2010 மாலை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள். அவர் தெய்வாதீனமாக கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இது விடயமாக காவற்துறையில் முறைப்பாடு செய்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்தோடு திருகோணமலை மாவட்டத்தில் நடக்கும் இப்படியான பயங்கர சம்பவங்களுக்கு சிவிலுடையில் வருகின்ற கடற்படைக்கும் யுத்தகாலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்த கும்பலுக்கும் தொடர்புள்ளதாக அறியப்படுகின்றது.

இவ் விடயங்களை மேலிடம் அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு சமாதானத்தை நிலைநாட்ட பாடுபடும் பாதுகாப்பு செயலாளர் கவனத்திற்கு எடுத்து திருகோணமலையில் மூவின மக்களும் நிம்மதியாகவும் சமாதானமாகவும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கும்பலால் மக்கள் தினமும் பீதியுடனேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to வெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வோரை குறிவைக்கும் கும்பல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com