27 ஆவது வருட கறுப்பு ஜுலை நினைவுகளுடன், 83 ஜூலையில் தமிழினம்மீது நடத்தப்பட்ட இன அழிப்பையும், இரத்தகளரியையும் நினைவு கூருவதோடு, அதன் பிற்பாடு ஈழத்தமிழரை அரவணைத்து, அடைக்கலம் தந்த அவுஸ்திரேலிய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக 13 ஆவது வருடமாக நடத்தப்பட்ட இந்த “இரத்ததான நிகழ்வு”, நேற்று ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 2.00 மணிவரை மெல்பேர்ன் SOUTHBANK இல் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்தவங்கியில் நடைபெற்றது.
தொடரும் எம் உறவுகளின் அவலநிலையை வெளிப்படுத்தியும், புலம்பெயர்ந்த அவுஸ்திரேலிய மண்ணிற்கு எமது அன்பை வெளிப்படுத்தியும் நடந்தேறிய இப் புனிதக் குருதிக்கொடையில் பெருமளவில் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களும், இளையோரும் உணர்வுடன் பங்களிப்பு வழங்கக் கூடியிருந்தனர்.
அன்றைய தினத்தில் இரத்த வங்கியில் இருந்ந நேரவசதி கருதி 40 கொடையாளிகள் மாத்திரம் குருதிக் கொடை வழங்கக்கூடியதாக இருந்தது. நிகழ்வின் இறுதியில் பங்கெடுக்க வந்த அன்பர்களிற்கும், இன்று இப்புனிதக் கொடையில் பங்கு கொள்ள வசதியில்லாதவர்களிற்கும் வேறு ஒரு தினத்தில் குருதிக்கொடை வழங்க தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்களினால் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.




மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to மெல்பேர்னில் தமிழர் புனர்வாழ்வு கழக ஏற்பாட்டில் இடம்பெற்ற குருதிக்கொடை நிகழ்வு