விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தனக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவித்து குமரன் பத்மநாதனை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. அதில் நடேசன் யுத்தநிறுத்த யோசனை குறித்து தன்னுடன் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல என்று இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. கே.மகேந்திரன் மறுத்திருக்கிறார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் யுத்தநிறுத்த திட்டம் தொடர்பான விபரங்களை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு தான் கசியவிட்டிருக்கவில்லை எனவும் அவர் மறுத்திருப்பதாக டி.என்.ஏ. செய்திச் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டுள்ளது.
ஊடகங்கள் சிலவற்றில் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்திகள் உண்மையற்றவை எனவும் விடுதலைப் புலிகளுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இருந்ததில்லையென்றும் மகேந்திரன் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் அணுகுமுறையை எமது கட்சி எப்போதும் எதிர்த்துவந்தது. இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டையே நாம் கொண்டிருந்தோம். மறுபுறத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்படவேண்டுமென்பதை நாம் ஆதரவாக இருந்து வருகிறோம் என்று பிரம்பூர் எம்.எல்.ஏ.யான கே.மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
தானோ தனது கட்சியோ புலிகளுடனோ அல்லது அந்த அமைப்பின் பேச்சாளரான நடேசனுடனோ தொடர்புகள் எதனையும் பேணியதில்லையென அவர் கூறியுள்ளார். செய்திகளில் அவர் தொடர்புகளைப் பேணி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குமரன் பத்மநாதனை (விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி முகாமையாளரும் இப்போது இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவருமான) மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. நடேசன் யுத்த நிறுத்த யோசனை குறித்து என்னுடன் பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது உண்மையல்ல என்று மகேந்திரன் கூறியுள்ளார்.
புதுடில்லியால் தயாரிக்கப்பட்ட யுத்த நிறுத்த திட்டம் குறித்து மகேந்திரனுடன் நடேசன் கலந்தாலோசனை செய்திருந்ததாக இலங்கைத் தினசரியொன்று பத்மநாதனின் பேட்டியை மேற்கோள்காட்டி குறிப்பிட்டிருந்தது.
அந்த உத்தேசத் திட்டத்தில் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டுமென்ற ஏற்பாடும் உள்ளடக்கப்பட்டிருந்தது என்று செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தத் திட்டத்தையே மகேந்திரன் வைகோவுக்குக் கசியவிட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது இவ்வாறு இருக்க இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த ம.தி.மு.க. பேச்சாளர் மறுத்துவிட்டதாக டி.என்.ஏ.செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கேபி கூறியதாக வெளிவந்த செய்தி உண்மையல்ல: மகேந்திரன்