பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட தமிழ் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளவராவார். வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி 11ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாக கொண்ட வரும் தற்போது லண்டனில் வசித்து வருப வருமான 19 வயது இளைஞன் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்ட குறித்த மாணவி இறுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.
காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தி நிலைமையே இந்த தற்கொலைக்காண காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங் களாக பேஸ்புக் மூலம் இருவரும் தொடர்பு களைப் பேணிவந்துள்ளதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி குறித்த மாணவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் தற்போது மாணவியின் வீட்டுக்கும் அவர் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து லண்டன் சென்றது முதல் குறித்த மாணவியை அந்த இளைஞன் நிராகரிக்கத் தொடங்கியதாகவும் இதனால் மாணவி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது. மீண்டும் மீண்டும் இணையமூடாக தொடர்பு கொள்ள முற்பட்டபோதும் இளைஞர் அவற்றை நிராகரித்த காரணத்தினால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணையமூடாகக்காதலித்து உயிரை விடும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பேஸ்புக்கில் மலர்ந்த காதல் தற்கொலையில் முடிந்தது