மீண்டுமொரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்க திரைமறைவில் எடுக்கப்படும் நடவடிக்கையாகவே மட்டக்களப்பில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அண்மையில் நடைபெற்ற பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி பறிப்பு முதல், மாநகரசபை உறுப்பினர் காணாமல் போயுள்ளமை வரை மக்கள் மத்தியில் மீண்டும் அச்சமான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.
பிள்ளையானின் கட்சியை சேர்ந்த மாநகரசபை உறுப்பினர் அண்மையில் காணாமல் போனதை தொடர்ந்து சனநாயக வழியில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தப்போவதாகவும் இதன் பின்னால் உள்ள சக்திகள் தமது உறுப்பினரை விடுவிக்கவேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த படையினரும் ஏனையவர்களும் முன்வர வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவங்களின் பின்னனியில் சிறிலங்கா ஆயுதப்படைகளை சேர்ந்தவர்களே இருப்பதனை உறுதிப்படுத்துவதாக கிழக்கு மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சம்பவங்களின் மூலம் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் தங்களின் காரியங்களை நிறைவேற்றவும் அச்சமடைந்துமுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கிழக்கில் நடைபெறும் சம்பவங்களின் பின்னனி: அரியநேத்திரன்