Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா தூதரகத்திடம் மன்னிப்புக் கோருமாறு, அமெரிக்க அதிகாரிகள் தன்னிடம் வற்புறுத்தி இருப்பதாக, பிரபல பொப் இசைப்பாடகி மயா (M.I.A) எனப்படும் மாதங்கி அருள்பிரகாசம் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க பொப் பாடகரை திருமணம் முடித்துள்ள மயாவிற்கு இக்ஹித் (ஐமாலன) என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையைப் பார்வையிட லண்டனில் உள்ள அவரது தயார் கலா அமெரிக்க வீசாவிற்கு விண்ணப்பித்தபோது, அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மயா கேட்டபோது, சிறீலங்கா தூதரகத்திடம் மன்னிப்புக் கோரினால் வீசா தருவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறிய போதிலும், அதனை தான் ஒரு போதும் செய்ய மாட்டேன் என அவர் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார்.

தனது தாயாருக்கு வீசா மறுக்கப்பட்டமை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்ரனிடம் முறையிட்டிருப்பதாக, மயா எனப்படும் மாதங்கி அருள்பிரகாசம் கூறியிருக்கின்றார்.

மயா வெளியிட்டுவரும் பொப்பிசை இறுவட்டுக்களில் சிறீலங்கா அரசின் இன அழிப்பைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளை வாழ்த்தியும், குறிப்பாக தற்கொடை புரிந்த கரும்புலிகளை வாழ்த்தியும் பாடியிருந்தார்.

மயாவின தந்தை அருள்பிரகாசம், அருளர் என்ற பெயரில் ஈரோஸ் அமைப்பில் இருந்திருக்கின்றார். இசையமைப்பாளர் .ஆர்.ரஹ்மானிற்கு ஒஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் கிடைக்க மயா உதவி புரிந்திருந்ததுடன், அதனை ஒஸ்கார் மேடையில் ரஹ்மான் கூறியிருந்ததும் நினைவூட்டத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மயா சிறீலங்கா தூதரகத்திடம் மன்னிப்புக் கோரவேண்டும்: அமெரிக்க அதிகாரிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com