Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிஸ் ஈழத்தமிழரவையின் ஒருங்கிணைப்பில் ஆரம்பிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளெங்கும் தமிழர்களால் ஐனநாயக அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள ஈழத்தமிழரவைகளின் ஆதரவுடன் முன்று ஆதரவளர்களும் தமது நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று 14.09.2010 பேல்லியத்தின் எல்லைப்பகுதியான ஸ்திறசன்பூர்க் பகுதியை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளோர் அண்மித்துள்ளனர். ஆகினும் ஐரோப்பிய ஒன்றியத்தை சென்றடைய இன்னும் 235Km கள் நடக்கவேண்டியுள்ளது.
உடலில் வலிகள் ஏற்பட்டுள்ளபோதும் தமிழனின் மனவலிமைக்கு ஏனையவை சிறியவை என்பதை உணர்த்தும் வகையில் சிறிதும் குறையாத உறுதியோடு தேவகி, ஜெகன் மற்றும் விநோத் ஆகியோரின் நடைபயணம் தொடர்கிறது.

நடைபயணத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரும் சில நாட்களாக இணைந்து நடந்து வருகின்றனர். எழுச்சிமிகு தாயகப்காடல்களை பாடியவண்ணம் இளையோர்கள் இணைந்து நடந்துவருவதானது நடைபயணத்துக்கு உரமூட்டுவதுடன் தமிழ் இளையோர்கள் ஈழவிடுதலை நோக்கி அணிதிடண்டு வருவதையும் எடுத்துரைக்கின்றது.

அத்துடன் சிறுவர்கள் பெரியோர்களென பலநூறு மக்கள் இணைந்து நடந்து தமது ஆதரவை வெளிக்காட்டி வருகின்றனர். இன்றைய நடைபயணத்தை யேர்மன் நாட்டைச்சேர்ந்த தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் நேரடியாக சமூகமளித்து செய்தியாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்வரும் 26.09.2010 அன்று தியாகதீபம் திலீபன் நினைவு நாளன்று மூன்று ஈழ உணர்வாளர்களும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தைச் சென்றடைவர். இவர்கள் சென்றடைவதை முன்னிட்டு எதிர்வரும் 27.09.2010 புருசல்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் முன்பாக மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பும் மனுக்கையளிப்பும் இடம்பெறவுள்ளது.

போக்குவரத்து ஒளுங்குகள் நாடுவாரியாக ஒளுங்குசெய்யப்பட்டுள்ளது. மானிலச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகொள்ளவும். தொடர்புகளுக்கு: 0041 79 594 95 17

இலங்கை அரசு மீது .நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

மனித உரிமைகள் மதிக்கப்படு;ம் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து ஐரோப்பா வாழ் மக்களையும் இப்பணயத்திற்கான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு நாடுவாரியான ஈழத்தமிழரவைகள் அழைப்புவிடுத்துள்ளனர்.

ஓர் இனம். ஓர் இலக்கு. மடியோம் மண்டியிடோம்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மனிதநேய நடைபயணம் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சென்றடைய இன்னும் 235 KM

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com