புலம்பெயர் தமிழர்களால் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு வரையப்படும் யாப்புடன் இம்மாத இறுதியில் அமைய இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்விற்கு முன்னதாக மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் அதுதொடர்பாக கலந்துரையாடும் முக்கிய பொதுக்கூட்டம் ஒன்று லண்டனில் நடைபெறவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக பிரித்தானியாவில் கடந்த மே மாதம் மக்களால் ஜனநாயகவளியில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே இவ்வாறு பிரித்தானியா வாழ் தமிழ்மக்களை சந்தித்து இரண்டாவது அமர்விற்கு செல்லும் முன்னதாக மக்களிடம் உள்ள கேள்விகள், ஐயப்பாடுகள், மற்றும் கருத்துக்களை கேட்டறிந்துகொள்வதற்காக இந்த முக்கிய, அவசர பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எனவே, இதுவரையில் மக்கள் மத்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாகவும், அதன் கொள்கைகள் தொடர்பாகவும் பல கேள்விகளோடும், சந்தேகங்களோடும் விவாதித்துக்கொண்டிருந்த மக்களுடன் மக்கள் பிரதிநிதிகளே நேரில் சந்தித்து அவை தொடர்பான அனைத்து விளக்கங்களையும் தர உள்ளதால் அனைத்து மக்களையும் இக்கூட்டத்தில் தவறாது சமூகமளிக்கும் படி கேட்கப்பட்டுள்ளனர்.
நாளை மறுநாள் 19-09-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று 180-186 அப்ப ரூட்டிங் றோட், ரூட்டிங் பகுதியில் மாலை 5:00 மணிமுதல் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு அனைத்து பிரித்தானியா வாழ் மக்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நேரம்: மாலை 5 மணி
காலம்: 19-09-2010 ஞாயிற்றுக்கிழமை
இடம்: 180-186 UPPER TOOTTING ROAD, LONDON, SW17 7EJ
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to லண்டனில் மக்கள் பிரதிநிதிகள், மக்களுடன் கலந்துரையாடும் மாபெரும் பொதுக்கூட்டம்