ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது இலங்கை, சூடான் மற்றம் கொங்கோ போன்ற நாடுகளின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து எந்த கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழுவும் நியமிக்ப்பட்ட பல மாதங்கள் கடந்தும் அது இயங்கவில்லை என்பதுடன், அதன் நான்கு மாத கால அவகாசம் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் பான் கீ மூன் குறித்த நாடுகளில் பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சிப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
கொங்கோவில் இடம்பெற்ற இனப்படுகொலை மூடி மறைப்பதற்காககவே அவரது விஜயமும் அமையவுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தை, தமது இரண்டாவது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்தற்காக பயன்படுத்தும் முயற்சியில் பான் கீ மூன் இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to தனது பதவிக்காக போர் குற்றங்களை மறைக்கும் பான் கீ மூன்: இன்னர் சிட்டி பிரஸ்