Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் நடக்கவிருக்கும் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழறிஞர் கா சிவத்தம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கை தமிழர் முருகபூபதி என்பவர் இந்த எழுத்தாளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த மாநாட்டுக்கு சிவத்தம்பி ஆதரவாக இருந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது இந்த மாநாட்டுக்கு சிவத்தம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முருகபூபதிக்கு சிவதம்பி விடுத்துள்ள வேண்டுகோளில், “உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் வைத்து நடத்த இது உகந்த நேரம் அல்ல என்று கூறியுள்ளார். இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சிக்கிறது. அது மாநாட்டை பிரச்சினைக்குரியதாக்கிவிடும் என்று சிவத்தம்பி கூறியுள்ளார்.

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்து வதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும். எல்லோரும் ஒன்று கூட வசதியாக இருக்கும். பிரச்சினைகளை சுதந்திரமாக விவாதிக்கலாம்என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது போர் குற்றங்களை மூடி மறைக்க நடக்கும் முயற்சியாக அமைந்து விடும் என்று கூறியிருந்தனர். எனவே மாநாட்டை அங்கு நடத்தக் கூடாது என்றும் மீறி நடத்தினால் நாங்கள் மாநாட்டை புறக்கணிப்போம் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே தமிழ் நாட்டு கலைஞர்கள் இலங்கையில் அரசு ஆதரவுடன் நடைபெறும் எந்த நிகழ்ச்சியையும் புறக்கணிப்போம் என்று அறிவித்து இருந்தனர். தனிப்பட்ட முறையில் நடத்தும் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பினால் இலங்கை சென்று கலந்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் இசைக் கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரம் ஏற்கெனவே வீரகேசரி பத்திரிகையின் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to தமிழ் எழுத்தாளர் மாநாட்டை சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்: சிவத்தம்பி

  1. இலங்கையில் நடப்பதை நாமும் எதிர்க்கின்றோம். அது என்ன சென்னையில் ஏன் தமிழர் வாழும் வேறு நாட்டில் நடத்தினால் என்ன கருணாய்நிதி கொடுக்கும் பட்டயம் இல்லாமல் போய் விடும் என்ற கவலையா இந்த கொழுப்புத் தமிழனுக்கு.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com