Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை கொடுப்பதில் எந்த அக்கறையும் செலுத்தாது, தமிழ் மக்களின் தாயக பூமியான தமிழீழத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது என பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் திரு . வி. கிருபாகரன் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 15வது கூட்டத் தொடர் இந்தவாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் . நா. விற்கான தாய்லந்து தூதுவர் தலைமையில் நடைபெறுகிறது.

இவ் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலை பற்றி - ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன், மனித உரிமை கண்காணிப்பு குழு, சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச கல்வி நிறுவனம், இமடார் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் எடுத்துரைத்தனர்.

கடந்த வியாழக்கிழமை (15.09.2010) ஐக்கிய நாடுகள் சபையில், பல அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களில் அங்கத்தவரும், பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளருமான திரு . வி. கிருபாகரன் அவர்கள் தமிழ் மக்களின் நிலைபற்றி எடுத்துரைத்தார்.

திரு கிருபாகரன் அங்கு கூறியதாவது:

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை கொடுப்பதில் எந்த அக்கறையும் செலுத்தாது, தமிழ் மக்களின் தாயக பூமியான தமிழீழத்தில,; சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றனர்.

தமிழீழ மக்களுக்கு எந்தவித புனர்வாழ்வு, புனரமைப்பு திட்டங்களை வழங்காத இலங்கை அரசு, சர்வதேச ரீதியாக முழுப் பொய்களைக் கூறிவருகிறது. இப் பொய்களை நம்புவதற்கும் பல தனிநபர்களும், நாடுகளும் உண்டு. காரணம் அவ் நாடுகளும், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு செய்யும் அநியாயங்கள் போன்றே, தமது நாடுகளில் வேறு இனங்களுக்கு செய்கின்றனர்;.

தமிழீழ மக்கள் தமது அரசியல் உரிமையையும், மனித உரிமையையும் பெற்றுக்கொள்ள, நீங்கள் அனைவரும் முன் வந்து உதவ வேண்டுமென கிருபாகரன் இக் கலந்துரையாடலில் கேட்டுக்கொண்டார்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலை நிறுவுவதிலும் அரசாங்கம் காலத்தை போக்குகிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com