Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தங்கள் கால்கள் புண்னாகியதையும் பொருட்படுத்தாது சர்வதேசத்திடம் நீதிகேட்டு மூன்றாவது ஐரோப்பிய நாட்டில் காலடி பதிக்கும் மனிதநேய உணர்வாளர்களை வரவேற்று வாழ்த்தும் ஜேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பு.

ஈழத்தமிழினத்தின் விடுதலைப்போர் தாயகத்தில் அமைதியாக்கப்பட்ட வேளையில் புலம்பெயர்நாடுகளில் தமிழீழத்துக்கான போராட்டம் தொடங்கிவிட்டது. உலகளவில் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களிலே இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.

போர் தொடங்கிவிட்டது. இந்தப்போர் வலுவடைய வேண்டும். இங்கேயே பிறந்து வளர்ந்து இந்த நாட்டு கலாச்சாரங்களையும் மொழிகளையும் இயல்புகளையும் அறிந்த இளம் தலைமுறையினரே தலமையேற்று நடத்தவேண்டும்.

இந்தவகையில் சிவந்தன் பிரித்தானியாவில் இருந்து .நா முன்றல் வரை நடத்திய மனிதநேயப்போரை தொடர்ந்து, ஜெனிவாவில் இருந்து பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலமையகத்தை நோக்கி திரு.ஜெகன் என்ற முதியவரும் திருமதி தேவகி திரு வினோத் ஆகிய மூவரும் மனித நேயப்போரைத் தொடங்கியுள்ளார்கள்.

தமிழீழத்துக்கான இந்தப்போரிலே எம்மையாரும் தோற்கடிக்க முடியாது. இந்த நாட்டு மக்களின் அரசியல்அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் எளிதாக அவர்களுக்கெல்லாம் எமது இலட்சிய வெறியையும் ஈழவிடுதலைத் தாகத்தையும், சிறிலங்கா அரசின் ஈழத்தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறவேண்டும். ஐனநாய விழுமியங்கள் உள்ள புலம்பெயர் நாடுகளில் எமது போராட்டமும் உறுதிசெய்யப்படும். இப்படி செய்யாமல் நாங்கள் விடுவோமேயானால் அது நமக்கு நாமே தேடிக்கொள்ளும் அவமானமாக அமையும். போராட் வடிவங்கள் மாறலாம், ஆனால் எமது இலட்சியம் மாறாது என்பதை நாம் உலக நாடுகளுக்கு தெரிவிக்கவேண்டும். சிறிலங்காவிற்கு எதிராக வலுவான எதிர்ப்புக் காட்டும் போர்க்குணமும் ஓர்மமும் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டுமே உண்டு

இந்த வகையில்

1.இலங்கை அரசுமீது . நா தானாக போர்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அத்தற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2.எமது பெண்கள் சிறுவர்கள் மீது முறைகேடு இழைத்த சிறிலங்கா அரசுமீது அனைத்துலக முறைமன்றில் ஒறுப்பு வழங்க வேண்டும். அத்துடன் சிறையில் தவிக்கும் தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

3.மானிட உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறிலங்காவை அனைத்து நாடுகளும் வேற்றுமைபண்ணல் வேண்டும்.

4.தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்

என்ற கோரிக்கைகளை முன்வைத்து சீரற்ற காலநிலையையும் , தங்கள் அகவையையும் பொருட்படுத்தாது மனிதநேய நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

தேசியத் தலைவரின் வழிகாட்டலில் சீரிய படையணியாக மறப்போர்புரிந்த வீரமறத்தியர் வழியில் திருமதி தேவகி குமார் அவர்கள் புண்பட்ட காலுடன் மேற்கொள்ளும் நடைபயணமே உணர்வாக உள்ளது. அவரின் வீரஉறுதியை நாங்கள் உணர்வுப+ர்வமாக வாழ்த்துகின்றோம்.

மனிதநேய உணர்வாளர்களின் கோரிக்கைகள் உலக அரங்கின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு வெற்றிபெறவேண்டுமென்று வாழ்த்துவதோடு அன்று மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று உலகத்தமிழர்களின் காதுகளில் உரைத்துச் சென்ற தீலிபனின் நினைவரங்கத் திடலில் உணர்வாளர்களுடன் நாங்கள் அணிதிரள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழ்ப் பெண்கள் அமைப்பு - ஜேர்மன்

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to உணர்வாளர்களுக்கு ஜேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பு வாழ்த்துச்செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com