Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது அரசமைப்பு திருத்தத்தின்படி அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற சபைக்கு எதிர்க்கட்சிகளின் தலைவரின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.. சுமந்திரனின் பெயரை எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரேரித்துள்ளார். அதனை சுமந்திரன் எம்.பி. நிராகரித்துள்ளார்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வருகின்றபோது அந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் அவையில் அங்கம் வகிப்பது குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று எம்.. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சிறிலங்கா நாடாளுமன்றில் 161 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 18 ஆவது திருத்த சட்டம் முழு நாட்டுக்குமே பாதகமானது என்றும் சர்வாதிகார ஆட்சிக்கு அச்சாணி என்றும் அமெரிக்கா முதல் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to நாடாளுமன்ற சபைக்கு சுமந்திரனை ரணில் நியமித்தார்: சுமந்திரன் சுமந்திரன் நிராகரித்தார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com