Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை கூறுவதற்காக .நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர்கள் குழு இந்தவாரம் பான் கீ மூனை சந்திக்கவிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக நிபுணர் குழு உறுப்பினர்களும் உதவி வழங்கும் அலுவலர்களும் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பிப்பதற்காக செயலாளர் நாயகத்தை இந்த வாரம் சந்திப்பார்களென்றும் .நா. பேச்சாளர் மார்ட்டின் நீசேர்கி கூறியுள்ளார்.

இது தொடர்பாக நியூயோர்க்கை தளமாக கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது;

இலங்கையின் மகிந்த ராஜபக்ஷ பதவிக்கால வரையறையை அகற்றியிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையானது தேசிய நல்லிணக்கத்துக்குப் பொருந்தாத் தன்மையைக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள பிரசுரம் தடுக்கப்பட்டுள்ள நிலையில் .நா.வும் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் மௌனமாக இருந்துள்ளனர்.

இது தொடர்பாக செப்டெம்பர் 14 இல் (செவ்வாய்க்கிழமை) பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நீசேர்கியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.

மார்ச்சில் அறிவிக்கப்பட்டிருந்த இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான பான் கீ மூனின் நிபுணர்குழு தனது பணிகளை இன்னும் ஏன் ஆரம்பிக்கவில்லை என்றும் ராஜபக்ஷ மற்றும் இலங்கையுடனான பான் கீ மூனின் தொடர்புகள் பற்றி இன்னர் சிற்றிபிரஸ் கேட்டது.

பதவிக்கால வரையறை அகற்றப்பட்டமையானது உள்விவகாரம் என்றும் இது தொடர்பாக .நா.வோ அல்லது பான் கீ மூனோ கருத்து தெரிவிக்க மாட்டார்கள் எனவும் நீசேர்கி கூறியுள்ளார்.

2009 இல் மோதலின் இறுதிக்கட்டத்தின் போது பாதுகாப்பு சபையில் இதனை சீனாவும் ரஷ்யாவும் கூறியிருந்தன. அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக " எக்கனோமிஸ்ட்" விமர்சித்திருந்தது. அச்சஞ்சிகை தடை செய்யப்பட்டது. ஜனநாயகத்துக்கு தணிக்கையானது பொருந்தாத்தன்மை கொண்டது என்ற பொதுவான சிந்தனையை நீசேர்கி முன்வைத்தார்.

பான் கீ மூனின் நிபுணர் குழுவானது தனது பணியை இதுவரை ஆரம்பிக்கவில்லை என்பதை நீசேர்கி உறுதிப்படுத்தியிருக்கிறார். நிபுணர் குழுவின் 4 மாத காலப்பணி இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த வாரம் குழுவின் உறுப்பினர்கள் பான் கீ மூனை சந்திப்பார்கள் என்று நீசேர்சி கூறியுள்ளார். நாங்கள் பார்ப்போம் என்று இன்னர் சிற்றிபிரஸ் கூறியுள்ளது.

.நா.வின் செயலாளர் நாயகமாக வருவதற்கு முன்பாக ராஜபக்ஷவுடனான பான் கீ மூனின் அநுபவத்தை விபரிக்குமாறும் பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சட்டர்ஜி இந்திய இராணுவ அதிகாரியாக இருந்த வேளையில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இந்திய அமைதிகாக்கும் படையில் அவர் பணியாற்றியதை உறுதிப்படுத்துமாறும் இன்னர் சிற்றிபிரஸ் மார்ட்டின் நீசேர்கியிடம் கேட்டது.

இந்த விடயங்கள் குறித்து "பிறகு வருகிறேன்" என்று இன்னர் சிற்றிபிரஸுக்கு நீசேர்கி கூறினார்.

அடிக்குறிப்பு: செப்டெம்பர் 13 இல் பான் கீ மூன் செய்தியாளர் மாநாட்டை நடத்தினார்.

ஆனால், கேள்வி கேட்பதற்கு இன்னர் சிற்றி பிரஸுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. செப்டெம்பர் 14 இல் மேலும் கேள்விகளுக்கு அனுமதி இல்லை என்று இன்னர் சிற்றி பிரஸுக்கு கூறப்பட்டது.

ஆதலால் இந்தக் கட்டுப்பாடு குறித்து விளக்கமளிக்குமாறு இன்னர் சிற்றிபிரஸ் கேட்டது. இலங்கை தொடர்பாக கேட்கவிரும்புவதாக இன்னர் சிற்றிபிரஸ் குறிப்பிட்டிருந்தது.

இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு விருப்பமில்லாமல் நீசேர்கி அனுமதியளித்ததாக தென்பட்டது. அதேசமயம் அக்கேள்விகளில் இரண்டிற்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்த விடயங்களை நாம் தொடர்ந்தும் பின் தொடர்வோம்.

இவ்வாறு இன்னர் சிற்றிபிரஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பான் கீ மூனின் மருமகன் இலங்கையில் பணியாற்றிய இந்திய அதிகாரியா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com