Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த்தாவையும், அவரது சகாக்க்களையும் அவமானப்படுத்தி அனுப்பிய பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்க்களையும் தெரிவிக்கின்றது.

தமிழின அழிப்பு சூத்திரதாரி மகிந்தாவின் பிரித்தானிய பயணத்தை முடக்கி, அவமானப்படுத்தியனுப்பிய, பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கும், ஏனைய நாடுகளிலிருந்து சென்று பங்குபற்றிய மக்களுக்கும் இத்தாலி மேற்பிராந்திய தமிழர் ஒன்றியம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

கொட்டும் பனியிலும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், கைக்குழந்தைகளுனுடனும் காத்திருந்து வரலாற்றுகடமையை செய்த எமது உறவுகளை பாராட்டுகின்றோம். இந்த மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களையும், பெரிதும் பாராட்டுகின்றோம்.

இந்நிகழ்வு எமக்கு இன்னுமொரு உண்மையையும் கூறியுள்ளது என்னவெனில் நாம் ஒன்றுபட்டால் எதிரியை இந்த உலகத்தில் எந்த மூலையிலுமிருந்தும் விரட்டமுடியும் என்பதுதான்.

எல்லாம் முடிந்து விட்டது என்று ஒதுங்கியிராது தொடர்ந்து எமது அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும், மற்றைய நாடுகளிலும் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை
எடுப்பதன் மூலம் எமது பக்கம் உள்ள நியாயத்தை உலகிற்கு எடுத்துரைக்கமுடியும்.

தேசியத்தலைவர் எமக்கெல்லாம் கற்றுத்தந்த உறுதியும், தன்னம்பிக்கையும் எம்மிடம் உள்ளவரை, எம்மால் எதுவும் முடியும் என்பதையே இச்செயல் எடுத்துரைக்கின்றது.

0 Responses to போர்க்குற்றவாளி மகிந்தவை அவமானப்படுத்திய ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்: - இத்தாலி தமிழர் ஒன்றியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com