Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிட்டனுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உறங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளைத் தட்டி எழுப்பி விட்டுள்ளார். அவர்கள் போராட் டங்களை மீள ஆரம்பிப்பதற்கான வாசலையும் திறந்து விட்டுள்ளார்என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்றுக் குற்றஞ்சாட் டினார். ஜே.வி.பியின் ஊடகவிய லாளர் மாநாடு பத்ரமுல்லை பெலவத்தையிலுள்ள அக்கட்சி யின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அங்கு கூறியவை வரு மாறு:


யுத்தம் நிறைவடைந்து ஒன் றரை வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில் யுத்தம் கார ணமாக இடம்பெயர்ந்த மக் களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகளை முழுமையாக நிவர்த்தி செய்யாது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டிஷ் பயணத்தை மேற்கொண்டார்.
ஜனாதிபதியின் இந்தப் பயணம் மூலம் அநாவசியமான பிரச்சினைகளே தோன்றின.

பிரிட்டனுக்குச் சென்றால் தனது செல்வாக்கு உயரும் என்று நினைத்தே அவர் சென்றார். முட்டாள்கள் சிலரின் அறிவுரைகளின்படி ஜனாதிபதி செயற்பட்டதனால் அவரும் அவமானப்பட்டதுடன், நாட்டுக்கும் அபகீர்த்தியை சம்பாதித்துக் கொடுத்துள்ளார்.
நாட்டில் பெய்துவரும் அடைமழையால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு அமைதியாக உள்ளது. மொத்தமாக 32 ஆயிரத்து 260 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, எண்மர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், மழையினால் மக்கள் பெரிதும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் அரசு தேவையற்ற பிரச்சினைகள் தொடர்பாக அலட்டுகின்றது. அன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசு நிதி ஒதுக்காமல், நாடாளுமன்றத்தில் தம்முடன் இருக்கும் உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்ய 148 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 102 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.


வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மழை காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில், அரசு அவர்களுக்கான நிதியை ஒதுக்காமல் ஏனைய விடயங்களுக்காக நிதி ஒதுக்குகின்றது. இப்படி அவர் கூறினார்.

1 Response to தூங்கிய விடுதலைப்புலிகளை விழிக்க வைத்த மகிந்தவின் முட்டாள்தனம்: ஜே.வி.பி

  1. உமையைகதான் கூறியுள்ளார். முதலில் பாதிக்கபட்டவர்களுக்கு செய்யவேண்டிய நிவாரனங்களை செய்யாமல் அரசு சொகுசுவாகனங்களுகும், வெளிநாட்டு பயணங்கள் என்று பெருமளவில் செலவு செய்வது இன அழிப்பையே காட்டுகிறது. தமிழர்கள் அவர்களுக்கு நிவாரணம் கொடுக்காமல் இருந்தால் தான் அவர்களை வைத்து வெளிநாடுகளிடம் மேலும் பிச்சை எடுக்கலாம் என்பது ராஜபக்ச கூட்டத்தாரின் இழிவான நோக்கம்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com