1
மண்ணின்
விடுதலைக்குப் போராடிய
தமிழச்சியின் நிர்வாணம்
இணையமெங்கும் ஒளிபரப்பு;
உயிரிருந்தும் உலவும் நாம் -
அதை கண்டும் -
சாகாத; இழி பிறப்பு!!
————————————————————–
2
மானத்தில் -
தொட்டால் சுடும் நெருப்பு,
இழிவாய் -
பார்த்தாலே பாயும் மின்சாரம்,
அவள் -
தாயிற்கும் ஒரு படி மேல் என்று
இனி புரியும் – சிங்களனுக்கு!!
————————————————————–
3
அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால்
ஒன்று பார்த்தவரையெல்லாம்
எரித்திருப்பாள்,
அல்லது – தன்னையாவது
எரித்துக் கொண்டிருப்பாள்!!
————————————————————–
4
தப்பித் தவறி
அவள் பிள்ளை இதை
பார்த்திருந்தால்-
எத்தனை ராஜபக்ஷேவை அவன்
கொன்றிருப்பானோ!!!!!!!?
————————————————————–
5
எம் மண்ணின்; வீரமென்
தமிழச்சிகள்,
நாய்கள் கொன்றுவிட்டு தான்
கொந்தியிருக்கின்றன!!
————————————————————–
6
ஜென்மம்
எத்தனை எடுத்தாலும் இனி
ரத்தத்தின் ஒரு துளியிலாவது
இருக்கும் -
அவன் மீதான; அவளின் கோபம்!
————————————————————–
7
யாரும் சாட்சிக்கு வேண்டாம்
காற்றும்.. வெளிச்சமும்..
மண்ணும்.. வானும்..
மரமும் செடிகளும் -
பார்த்துக் கொண்டு தானிருந்தன
அந்தக் கயவர்களை!!
————————————————————–
8
கடல் தகதகவெனக்
கொதித்து -
உலகத்தை சூழ்ந்து அழித்திருக்கும்;
அந்த கொடுமைக்கு உடனே
தண்டனை கொடுப்பதெனில்!!
————————————————————–
9
யாரோ ஒருவனுக்கு
துணிவிருந்தால்
அவள் கையில் ஒரு அரிவாளை
கொடுத்துவிட்டு சொல் -
உன்னை இப்படிச் செய்வேனென்று;
அந்த அரிவாளில் -
உன்னைப் போல் – அவள்
நூறு பேரை அறுத்திருப்பாள்!!
————————————————————–
10
எனக்கு
மரணத்தை இபொழுதேக் கொடு;
அதற்கு ஈடாக -
இணையத்தில் தெரிந்த
என் தமிழச்சியின் வெற்றுடம்பை
ஈழ விடுதலையால் போற்று,
இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்!!
————————————————————–
வித்யாசாகர்
வித்யாசாகரை வணங்குகிறேன் , அந்த தமிழச்சி சிங்கள நாய்களுக்கு இடையில் எப்படிக் கதறியிருப்பால், எததனைபேர் நகம்பட்டு படபடத்திறருக்கும் அந்த பட்டாம் பூச்சி என்பதை என்னால் கறபனை செய்துபார்க்க முடிகிறது, உலகத்தமிழரே ஆடையிழந்த பெண்
எனது தங்கை
தமிழுக்கு தாய்,
கவிஞன் அண்ணன்
ஈன்று தருகிறாள்
இன்னும் பிள்ளையை!
அண்ணன் இருக்கிறான!
பிள்ளைகள் பார்த்துவிட்டால்
என்னவாகும்?
பதில் வித்யாசாகரின் கவிதையில்,
வித்யாசாகரை வணங்குகிறேன் , அந்த தமிழச்சி சிங்கள நாய்களுக்கு இடையில் எப்படிக் கதறியிருப்பால், எததனைபேர் நகம்பட்டு படபடத்திறருக்கும் அந்த பட்டாம் பூச்சி என்பதை என்னால் கறபனை செய்துபார்க்க முடிகிறது, உலகத்தமிழரே ஆடையிழந்த பெண்
எனது தங்கை
தமிழுக்கு தாய்,
கவிஞன் அண்ணன்
ஈன்று தருகிறாள்
இன்னும் பிள்ளையை!
அண்ணன் இருக்கிறான!
ஈன்றுதரும் பிள்ளைகள் பார்ப்பார்கள்
என்னவாகும்?
பதில் வித்யாசாகரின் கவிதையில்,