Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினமான இன்று தமிழர்களுக்கான ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் நன்மை கருதி தமிழ்-24 (ரி-24) எனப்படும் இந்தப் புதிய தமிழ் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும், தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மீண்டும் இந்தத் தொலைக்காட்சி ஊடாக வலம்வரவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர்.

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஒளிபரப்பாகும் இந்த தெலைக்காட்சிச் சேவை, தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகளெங்கும் விரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது தனது பரீட்சார்த்த ஒளிபரப்புக்களை மேற்கொள்ளவுள்ள இத் தொலைக்காட்சி, சில தினங்களில் 24 மணி நேர சேவையைத் தொடங்கவுள்ளனர்.

கடந்த காலங்களில் பேராதரவு வழங்கிய தமிழ் மக்கள், இப்புதிய தொலைக்காட்சி ஊடாக வரும் தங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கி கரம்கோர்த்து நடந்துவருமாறு இத்தொலைக்காட்சியை ஆரம்பித்துள்ளவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

ஈரோபேர்ட் 9V (Eurobird 9A (9 degree East) Freq: 11843-V, Symbol Rate: 27500, Fec: 3/4 எனப்படும் அலைவரிசை ஊடாக இத் தொலைக்காட்சியை நீங்கள் காலை 10 மணி முதல் பார்வையிட முடியும்.

www.tamil24.tv

tamiltvinfo@gmail.co.uk

UK: 07956446195

Swiss: 0796430215

France: 0148348502 / 0666098217


0 Responses to ஐரோப்பாவில் இருந்து தமிழர்களுக்கான புதிய தொலைக்காட்சி: தமிழ்24

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com