Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துளி 30 (14-01-2011), வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகில் 2042ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இரவு 10.00 மணி முதல் 11.55 மணி வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு வருகைத் தந்த சுமார் 500 பேர் சரியாக 12.00 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, ரோசா பூக்களை தூவி, தமிழர் ஆண்டு - திருவள்ளுவர் ஆண்டு! வள்ளுவம் வாழ்க! தமிழர் ஒற்றுமை ஓங்குக! போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி கிராமியப் பாடலுக்கு நடனம் ஆடி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழர் எழுச்சி இயக்கம் மற்றும் தமிழகப் பெண்கள் செயற்களம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில கொள்கைப் பரப்புச் செயலர் பார்வேந்தன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க செயலர் பாவேந்தன், இளைஞர் இயக்க நிறுவனர் மருத்துவர் எழிலன் நாகநாதன், இரேவதி நாகராசன், சாக்குவார் தங்கம் ஜீவஅன்பு, சைதை மதி பறையர், அன்புதாசன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் ஏராளமான பெண்களும் சிறுவர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

நன்றி!

அன்புடன்

.வேலுமணி
ஒருங்கிணைப்பாளர்
தமிழர் எழுச்சி இயக்கம்.
9710854760

.இசைமொழி
ஒருங்கிணைப்பாளர்
தமிழகப் பெண்கள் செயற்களம்
9094430334




1 Response to தமிழர் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

  1. kannan Says:
  2. very nice

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com