Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புத்தளம் ஆனமடுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் சிவிலியன் ஒருவரைக் கண்டபடி தாக்கியுள்ளது மாத்திரமன்றி, கடித்துக் குதறிக் காயமேற்படுத்தியுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான நபர் புத்தளம் நவகத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் ட்ராக்டர் (உழவு இயந்திர) சாரதியொருவராவார். பொலிசார் அவர் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் கடித்துக் குதறல்கள் காரணமாக அவர் தற்போதைக்கு நிக்கவெரட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் குறித்து புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே அவ்வாறான மிருகத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நவகத்தேகம பொதுமக்கள் ஒன்று திரண்டு பிரதான பாதையில் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.



0 Responses to புத்தளம் பொலிசாரின் வெறிநாய் தாக்குதல் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com