Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று சிறிலங்கா படையினரால் வட போர்முனையில் கிளாலிஎழுதுமட்டுவாள் ஊடாக பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இப்படை நடவடிக்கைக்கு எதிராக சனவரி 16 – 17 வரை விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் போரிட்டு படைநடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினர்.

இத்தற்காப்புச் சமரில் லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட 70 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.




1 Response to லெப்.கேணல்கள் காவியா, மதி உட்பட்ட 70 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்

  1. vira vithukalai vithithulom

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com