Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடா ரொறொன்ரோ மாநகரில் வீர வேங்கைகளான கேணல் கிட்டு மற்றும் ஒன்பது வேங்கைகளினதும் மற்றும் கேணல் சார்ல்ஸ் சாள்ஸ் அவர்களின் நினைவுதினமும் மாவீரர் இல்லம் இணையத்தள திறப்பு நிகழ்வும் தை மாதம் 16ம் திகதியன்று கனடா கந்தசுவாமி கோயிலில் மண்டபத்தில் நடைபெற்றது.

கிட்டண்ணா அண்ணாவும் சக வீரவேங்கைகளும் தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தம்மைத்தானே ஆகுதியாக்கி ஆகுதியாக்கி தமிழீழ போராட்டத்தின் அடிக் கற்களாகினர் கிட்டண்ணா மற்றும் வீரவேங்கைகளின் நினைவாக தமிழ் இளையோர் அமைப்பின் நாடகமும், அதனைத் தொடர்ந்து சிறப்புரைகளும் கலை நிகழ்வுகளும் உணர்ச்சி பூர்வமாக நடைபெற்றன. இந்நிகழ்வில் ரொறொன்ரோவாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்டு இம் மாணமாவீரர்களுக்கு தமது இதய அஞ்சலியைச் செலுத்தினர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவீரர் இல்லம் இணையத்தள வெளியீடு நடைபெற்றது. இவ் இணையத்தளத்தை மாவீரர்களான லெப்டினட் கேணல் கில்மன் மற்றும் பிரிகேடியர் தீபன் அவர்களின் சகோதர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவீரர் இல்லம் இணையத்தள (www.maaveerarillam.com) இவ் இணையத்தளத்தினை தேசிய தலைவரின் அவர்களின் முற்கூற்றுக்கிணங்க இயங்கிவரும் கனடா தமிழ் இளையோர் அமைப்பு வெளியிட்டு வைத்துள்ளது. இவ் இணையத்தளமானது, ஈழத்தாயின் சுதந்திரத்திற்காக தமதுயிரை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களது விபரக் கொத்துக்களை அவர்களது மரணத்தால் அழியாத வீர காவியங்களையும் மற்றும் அவர் சாந்த விபரணங்களையும் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு தமிழர்களின் உயிருக்குள் உறைந்திருக்கும் மாவீரகளின் தியாகங்களை அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்லும் வண்ணம் இவ் இணயதளம் ஆரம்பிக்க பட்டுள்ளது .

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் எமது மாவீரர் செல்வங்களின் சுவடுகள் அழிக்கபட்டுவரும் காலத்தில் இவ் இணையத்தளம் வெளியிட்டு வைக்கபடுள்ளமயானது தமிழ் இளையோர் மத்தியில் பெரும் உச்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது விடுதலை நோக்கிய பயணத்தில்.






0 Responses to கனடாவில் கேணல் கிட்டு நினைவு கூரல் நிகழ்வு (காணொளி, படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com