தமிழீழத்தின் பெருமைமிகு தளபதியாய், தேசியத் தலைவரின் நம்பிக்கை நாயகர்களில் ஒருவராய் களத்தில் வெற்றிகள் குவித்த தளபதி கேணல் கிட்டு அவர்களினதும், அவரோடு வங்கக்கடலில் வீரகாவியமான மேலும் ஒன்பது வீரவேங்கைகளினதும், 18 வது நினைவேந்தல் நிகழ்வு, தமிழர் நடுவத்தால் பிரான்சில், வெகு சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் நடாத்தப்பட்டது.
நீண்டகாலமாக விடுதலைச் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டுவரும், திரு. விக்டர் அவர்கள் ஈகைச்சுடரேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும், கலைமணி இந்திரன் குழுவினரின் இசைவணக்கமும் இடம்பெற்றன.
தாயகத்தில் கிட்டண்ணாவுடன், நெருங்கிப்பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்த தாயகக் கலைஞன் திரு தனபால் அவர்கள், கிட்டண்ணாவை நினைவுபடுத்தும், கலை ஆக்கம் ஒன்றை வழங்கினார்.
நிகழ்வின் தொடர்ச்சியாக, சமகால சமூக அரசியலைப் பதிவு செய்யும் ‘செந்நீர் வி;ட்டு வளர்த்தோம்;’ கையேடு வெளியிட்டு வைக்கப்பட்டது. பிரான்ஸ் தமிழ் மக்கள் மத்தியில், நீண்டகாலமாக கலை இலக்கிய அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள திரு. பரா அவர்கள், இக் கையேட்டை வெளியிட்டுவைக்க, தமிழர் நடுவத்தின் உபதலைவர் திரு. விக்டர் அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அந்தக் கையேட்டில், தமது ஆக்கங்களைப் பதிவு செய்துகொண்ட திரு. ஜெயா, திரு. பாலகணேசன், திரு. சுதன்ராஜ் ஆகியோர் தமது ஆக்கங்களை பொதுமக்கள் முன் வைத்தனர்.
இக்கையேட்டில், சிறப்பாக, புலமையாளர் திரு. நடேசன் சத்தியேந்திரா அவர்கள், 2007ம் ஆண்டு சர்வதேச கருத்தரங்கொன்றில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி மொழிபெயர்க்கப்பட்டு, இணைக்கப்பட்டிருந்தது.
திரு.நாதன் அவர்களின் கிட்டண்ணா குறித்த பதிவும், திரு. கஜனின், விடுதலைப் புலிகள் மீதான தடை ஏன் நீக்கப்படவேண்டும் என்பதை விளக்கி வலியுறுத்தும் ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
கிட்டண்ணாவின் நினைவுநாள் நிகழ்வில் அடுத்த சிறப்பாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்சு நாட்டுக்குரிய முதலாவது தேசிய அட்டை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, உரையாற்றிய ஊடகவியலாளர் திரு. சிவா சின்னப்பொடி அவர்கள், தமிழர் நடுவம் தனது முதலாவது வேலைத்திட்டமாக வரித்துக்கொண்டுள்ள, விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கான வெகுசனப் போராட்டத்தின் இன்றியமையாத தேவை குறித்து தனது கருத்தை முன்வைத்ததுடன், நாடுகடந்த தமிழீழ அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அட்டையின் தேவை மற்றம் அவசியம் குறித்தும் எடுத்து விளக்கினார்.
நிகழ்வின் இறுதியாக, தமிழ் உணர்வுள்ள தமிழகக் கலைஞர்களால், தமிழீழ மக்கள்பால் கொண்ட ஈடுபாடு காரணமாக உருவாக்கப்பட்ட ‘மண்ணும் சிவந்தது’ என்ற குறும்பட இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
புலத்துக் கலைஞன் திரு. இந்திரன் அவர்கள் இறுவெட்டை வெளியிட்டு வைக்க, தாயகக் கலைஞன் திரு. தனபால் அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டார்.
அனைத்து நிகழ்வுகளும், சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் அமைந்தன.

0 Responses to பாரிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கேணல் கிட்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)