Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியகமாக மாற்றி அதனைக் காட்டிப் பிழைக்கும் சிங்களம்.

அனைத்து வசதிகளோடும், தொழில்நுட்பத்தோடும் மற்றும் பல நாடுகளின் உதவிகளைப் பெற்றுவந்தும், இலங்கை அரசானது ஆயுதங்களையும் ரோந்துக் கப்பல்களையும் வெளிநாடுகளிடமே வாங்கி வந்தது. ஆனால் விடுதலைப் புலிகளோ, தம்மிடம் இருந்த வளங்களைக் கொண்டு, சிறிய இடப்பரப்பில் இருந்தாலும் குறுகிய தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு தமக்குத் தேவையான பல ஆயுதங்களை, கப்பல்களை, ஏன் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கூட வடிவமைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது படகுகளைத் தயாரித்து, பல தாக்குதல்களையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

ஆனால் சிங்களமோ அதனைக்காட்டி பிழைப்பு நடத்துகிறது. வெளிநாட்டில் இருந்து, கொழும்பிற்கு வரும் பல இலங்கை உயரதிகாரிகளின் உறவினர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் வன்னிக்குப் போய் புலிகளின் இடங்களைப் பார்க்க இவ்வளவு தொகை. அதி உயர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இவ்வளவு தொகை என அறவிடப்பட்டு, பின்னர் அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று, புலிகளின் பாசறைகளையும், அவர்கள் தயாரித்த ஆயுதங்களையும் காட்டி, காசு வாங்குகிறது சிங்களம். இதைவிட வெட்கக்கேடான செயல் உள்ளதா ?

1990 களில் பசிலன் 2000 என்னும் பாரிய ஷெல் எறிகணையைக் கண்டு பிடித்தனர் புலிகள். அதன் அகோரம் தாங்காமல் தனது மனைவியோடு தப்பி ஓடினார் கோட்டைக்குப் பொறுப்பாக இருந்த அப்போதைய இராணுவ அதிகாரி. பின்னர் "அருன்" எனப்படும் துப்பாக்கியில் பொருத்தி செலுத்தும் சிறியவகை ஏவுகணைகள் தொடக்கம், பிந்திய காலத்தில், கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இவர்கள் வடிவமைத்தனர். இறுதியாக போர் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில், புலிகளின் கப்பல் கட்டும் தொழிற்சாலை ஒன்றை இராணுவம் கைப்பற்றியவேளை, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அங்கே காணப்பட்ட அனைத்து கப்பல்களும் புலிகளால் வடிவமைக்கப்பட்டவை என்பதே உண்மையாகும்.

அவர்கள் பாவித்த தொழில்நுட்பம், மற்றும் நேர்த்தியான கட்டுமாணம் என்பன வியப்பில் ஆழ்தியது. அதனால் அவர்கள் அத் தொழில்சாலையை, பாதுகாத்து, ஒரு அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். அங்கே புலிகளால் கட்டப்பட்ட தாக்குதல் படகுகள், தாக்குதல் நீர்மூழ்கிப் படகுகள், உட்பட, புலிகளால் பாவிக்கப்பட்ட பல கனரக ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் பாவித்த கைத்துப்பாக்கிளும் இதில் அடங்கும். அங்கே தரையில் இருந்து கப்பலைத் தாக்க கடலுக்கு அடியால் அனுப்பப்படும் ஏவுகணை(ரோப்பிடோக்கள்) களும் அடங்கும். சில வகை ரோப்பிடோக்களை புலிகளே வடிவமைத்தும் உள்ளனர்.

பல சிங்கள மக்களுக்கு அதனைக் காட்டி, தமது பெருமைகளை பிதற்றிக்கொள்ள சிங்கள இராணுவம் இதனைப் பயன்படுத்துகிறது. சாதாரண மக்களால் இப் பகுதிகளுக்குச் செல்லமுடியாது. இராணுவ உயரதிகாரியின் குடும்பஸ்தர்கள், வெளிநாட்டு தூதுவர்களின் குடும்பத்தவர் என உயர் பீடத்தில் உள்ளவர்களுக்கே இராணுவம், காசைப் பெற்றுக்கொண்டு இதனைக் காட்டி பெரும் பணம் ஈட்டிவருவதாக அறிகிறோம். இதனால் திரட்டப்படும் பணத்தின் பெரும்பங்கு யாருக்குச் செல்கிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள்.

இச் செய்தி அதிர்விலிருந்து...












3 Responses to விடுதலைப் புலிகள் பாவித்த ஆயுதங்களை காட்டிப் பிழைக்கும் சிங்களம்: (படங்கள் இணைப்பு)

  1. kannan Says:
  2. intha polappukku singalam govt thookkupottu saakalaam .vaalka tamil

     
  3. pulikalin thakam thamil eelam..............

     
  4. Unknown Says:
  5. இது திரும்பவும் எங்களிடம் வரும் என்று இன்னுமா அவனுக்குத்தெரியாது

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com