Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் போல் கலன்ரா அவர்களால் கனடியத் தமிழர் தேசிய அவையின் தலைமைச் செயலகம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை 15.01.2011 காலை 11.00 மணிக்கு கனடியத்தமிழர் தேசிய அவைத் தலைமையகம் கனடாப் பாராளுமன்ற உறுப்பினர் போல் கலன்ரா அவர்களால் நாடா வெட்டித் திறந்து வைக்கப்பட்டது.

நகரசபை உறுப்பினர் லோகன் கணபதியும் திரு.துரைராஜா விநாசித்தம்பி (முன்னை நாள் தமிழீழச் சங்கத் தலைவர்) அவர்களும் மங்கள விளக்கேற்றி வைத்தனர்.

தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து கனடியத் தேசிய கீதம் அகவணக்கம் இடம்பெற்றன. பின் கனடியத் தமிழர் தேசிய அவையின் தலைவர் மோகன் இராமகிருஸ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கியதைத் தொடர்ந்து காணொளியில் கனடியத் தமிழர் தேசிய அவையின் செயற்பாடுகள் காண்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கனடாப் பாராளுமன்ற உறுப்பினர் போல் கலன்ரா அவர்கள் தனது வாழ்த்துரையைத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஒன்ராறியோ பாராளுமன்ற ரொறன்ரோ மத்தி உறுப்பினர் கிளென் முறே அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றது. லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னெற்றிவ் அவர்களின் வாழ்த்துரையும் நவதீப் பெயின்ஸ் அவர்களின் வாழ்த்துரையும் வெளி இணைப்புத் தொடர்பாளர் ஜில் அவர்களால் வாசிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிறவுண் அவர்களின் வாழ்த்துச் செய்தியை பார்ம் ஜில் அவர்களும் வாசித்தார். இவர்களைத் தொடர்ந்து மார்க்கம் 7ஆம் வட்டார மாநகர சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் தமிழர் தேர்தல் ஆணையம் சார்பில் நேரு குணரட்ணம அவர்களும் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் சார்பில் அன்ரன் பிலிப் அவர்களும் வாழ்த்துச் செய்திகளை வழங்கினர்.

இத்தோடு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி மதிய உணவும் வழங்கப்பட்டு இனிதே கனடியத் தமிழர் தேசிய அவையின் திறப்புவிழா நிறைவுபெற்றது.

0 Responses to கனடியத் தமிழர் தேசிய அவையின் தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com