Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களுக்கு மகிந்தாவோ அல்லது டக்ளஸ் அண்ணனோ பொறுப்பல்ல என்று ஒட்டுக்குழு முரளிதரன் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் வேண்டுமென்றால் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆயினும் டக்ளஸ் தேவானந்தாவையோ, அவரது கட்சியான .பீ.டீ.பி. கட்சியையோ கூட குற்றம் சாட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றில் யாழ்.குடா வன்செயல்கள் தொடர்பான கவனயீர்ப்புப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஒட்டுக்குழு முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அதற்காக இராணுவத் தளபதியை குறை சொல்ல முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் ஒருவர் தவறு செய்தால் அதற்காகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையே குற்றம் சாட்ட முடியாது. அவை தனி மனித செயற்பாடுகள்.

யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இராணுவம் மற்றும் பொலிசாருக்குப் போதுமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதை விடுத்து வெறுமனே அரசாங்கத்தையும், டக்ளஸையும் இன்னும் பாதுகாப்புத் தரப்பினரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.

தமிழ் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சிங்கள மக்களே ஓடிவந்து முதலில் உதவிகளைச் செய்தனர். ஆனால் இன்னும் புலம்பெயர் தமிழ் மக்கள் போதுமான பங்களிப்பை வழங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயத்தில் போதுமான ஒருங்கிணைப்பை வழங்கவில்லை. புலம் பெயர் மக்களிடம் அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும்.

மட்டக்களப்பில் அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அரச தரப்பினராக இருந்த போதும் அங்கே சட்டம் தன் கடமையைச் செய்தது. குடாநாட்டிலும் அது தான் நிலை. சட்டத்தின் முன் சகலரையும் சமமாக நடத்தவே அரசாங்கம் விரும்புகின்றது என்றும் ஒட்டுக்குழு முரளிதரன் கூறினார்.

0 Responses to குற்றச்செயல்களுக்கு மகிந்தாவோ, டக்ளஸ் அண்ணனோ பொறுப்பல்ல: ஒட்டுக்குழு முரளிதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com