Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த ராஜபக்சவுடன் கருணாநிதி நெருங்கிய நட்பைப் பேணுவதாகவும், இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வதாகவும் டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கிறன. தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாகவே தொண்டமான் சாத்தியமாக்கியுள்ளதாகவும் டெய்லி மிரர் கூறியுள்ளது.

போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் மகிந்த ராஜபக்ச என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் கோபத்தினை வெளிப்படுத்தும் ஒரு தன்மையே தமிழ்நாட்டில் காணப்பட்டது. ஆனால் இன்று அதிபர் ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகளைப் பாடசாலைகளில் விநியோகிக்கும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.



அண்மைய காலங்களில் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு பயணம் செய்த தொண்டமான் கருணாநிதியினைச் சந்தித்து அதிபர் ராஜபக்சவின் தகவல்களைப் பரிமாறியிருக்கிறார். இப்படித்தான் இவர்களுக்கிடையிலான உறவு ஆரம்பமானது.

குறிப்பிட்ட சில அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கிறன. தனது அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்தியே மகிந்த ராஜபக்ச கருணாநிதியினை வென்றிருக்கிறார். அதே சாணக்கியத்தினையே அதிபர் ராஜபக்ச .நாவினது செயலாளர் நாயகம் பன் கீ மூனுக்கும் பிரயோகித்திருந்தார்.

மகிந்தவினது இராசதந்திர முனைப்புக்களின் விளைவாகவே பன் கீ மூம் தான் அமைத்த வல்லுநர்கள் குழுவினைச் சிறிலங்காவிற்கு அனுப்பமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் எனச் சிலர் கூறுகிறார்கள். மகிந்தவின் சாணக்கியத்திற்குப் பலிக்கடாவான அடுத்த நபர் கருணாநிதியா அல்லது இல்லையா என்பது தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள மாநிலத் தேர்தல்களின் பின்னர்தான் தெரியவரும் என்றும் டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to மகிந்த, கருணாநிதி இரகசிய தொடர்பு: உறவுப் பாலமாக ஆறுமுகம் தொண்டமான்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com