இலங்கை கிழக்குப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் திடீரென கலந்துகொண்ட அமைச்சர் கருணா பல்கலைக்கழக மாணவர்களை மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மண்முனை என்னுமிடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நிவாரணப் பொருட்களை மாணவர்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அமைச்சர் கருணா “உங்களை யார் இங்கு வரச் சொன்னது? கிழக்குப் பகுதிக்கு வர உங்களை யார் அனுமதித்து? என்னிடம் ஏன் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை?” என்று பல்கலைக்கழக மாணவர்களை அவர் மிரட்டியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிவாரண நிகழ்ச்சியில் அழைப்பு இல்லாமலேயே கருணா கலந்துகொண்டதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் மழை, வெள்ளம் காரணமாக கிழக்குப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

0 Responses to உங்களை யார் இங்கு வரச் சொன்னது: ஒ.கு.த கருணா