Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச இராணுவ குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் இலங்கை நிறுத்தப்படுமானால் அதற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பாகவோ அதில் நியமிக்கப்பட்ட சிலர் குறித்தோ ஐக்கிய தேசியக்கட்சிக்கு நம்பிக்கையில்லை.

நாட்டின் மீது சர்வதேசத்தினால் குற்றம் சுமத்தப்படும் போது அதனை எதிர்கொள்ளும் வகையில், சுயாதீனமான சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை. அதனை விடுத்து சர்வதேச நிர்ணயம் இல்லாத ஆணைக்குழு ஒன்றையே அமைத்தது.

அத்துடன், அந்த ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டவர்கள் பக்கசார்பானவர்கள். எனவே இந்த குழுவின் விசாரணைகளில் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை.

இந்தநிலையிலேயே அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர் ரொபட் பிளேக், இலங்கை சர்வதேச இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

எகிப்து, டியூனிசியா, லிபியா, ஆகிய நாடுகளை ஒத்தவகையிலேயே இலங்கையும் பார்க்கப்படவேண்டும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள இராணுவ தலைமையக காணியும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பண்டாரநாயக்கவின் சிலையும். சீன நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த காணி குத்தகைக்கு வழங்கப்படவில்லை என்று ஜனாதிபதி அனுராதபுரத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

எனில் ஜனாதிபதியின் கூற்றா? அல்லது கேஹலிய ரம்புக்வெலவின் கூற்றா உண்மையானது என்று மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்

0 Responses to இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுமானால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com