இலங்கை அரசாங்கமும், சர்வதேசமும் இறுதி யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் எஸ்.ஆர்.ஈ.எஸ்.85 என்ற சட்ட மூலம் ஒன்றை அமெரிக்காவின் செனட் சபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் செனட் உறுப்பினர் ரொபர்ட் கெசேஸ்.ஜே.ஆர் இந்த யோசனையை கடந்த திங்கட்கிழமை முன்மொழிந்தார். அவருடன் 11 ஏனைய செனட் உறுப்பினர்களும் இந்த யோசனையை முன்மொழிந்தனர்.
இலங்கையின் போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா இது வரையில் நிலையான கொள்கை எதனையும் கொண்டிருக்கவில்லை.
எனவே இலங்கை தொடர்பில் முழுமையான வினைத்திறனாக கொள்கை ஒன்றை உருவாக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலையிட வேண்டும் எனவும் இந்த யோசனையில்; கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற யுத்த குற்றச்சாட்டுகள், யுத்தத்தின் பின்னரும், முன்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், இலங்கையும், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் சுயாதீனமாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு செல்லவும், அங்குள்ள மக்களை சந்திக்கவும், ஊடகவியலாளர்களுக்கும், சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்: அமெரிக்கா