Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் அரசியலமைப்பை மாற்றி மேலும் சில தடவைகள் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட விரும்பியிருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொரகொல்லையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

நாட்டிலுள்ள அனைவருக்கும் தலைவர்களாவதற்கான உரிமையுள்ளது. பண்டாரநாயக்க குடும்பத்தினர் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டுமென தான் ஒருபோதும் நினைக்கவில்லை.

தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கட்சியிலிருந்து 90 வீதமானவர்கள் ஜனாதிபதி தேர்தலில் மூன்று நான்கு தடவைகள் போட்டியிடுமாறு என்னிடம் கோரினர். எனினும் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக நான் பதவி வகித்தேன். இனிமேல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அப்போது தீர்மானித்ததாலேயே அதன்பின் போட்டியிடவில்லை.

இன்றையநிலையை விட

அன்று மிக எளிதாக என்னால் அதனைச் செய்திருக்க முடியும். எனது தாய், தந்தையர் கற்றுத்தந்த அரசியல் மற்றும் ஒழுக்கம் என்பவற்றின் அடிப்படையின் காரணமாகவே மீண்டுமொருமுறை பதவி வகிப்பதற்காக அரசியலமைப்பை மாற்ற நான் விரும்பவில்லை.

ஆனால் இன்று அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய தலைவர்கள் இல்லாமையே இந்த நாட்டின் குறைபாடாகவுள்ளது. பண்டாரநாயக்க குடும்பத்தினர் மட்டுமே ஆட்சிசெய்ய வேண்டுமென நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இதன் காரணமாகவே எனது பிள்ளைகளை அரசியலில் ஈடுபட அனுமதிக்கவில்லை எனவும் சந்திரிகா மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை: சந்திரிகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com