வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கப்பேகின்றார்கள் என்பதினை சர்வதேச நாடுகள் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6-30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற போது தலைமை உரையாற்றுகையில் வினோ எம்.பி மேற்படி தெரிவித்தார்.
அவர் தெடர்ந்தும் உரையாற்றுகையில்:
தமிழ் மக்களுக்காண அங்கிகரிக்கப்பட்ட பலம் தமிழ் தேசியக்கூட்டமைப்புத்தான் என்பதனை நாம் சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.நாங்கள் ஒரு காலத்தில் தமிழிழத்திற்காக போரடியவர்கள்.ஆனால் இன்று உள்ளுராட்சி சபையினை எமது ஆட்சியின் கீழ் கொண்டுவர போரடிக்கொண்டிருக்கின்றோம்.
அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக போராடியுள்ளோம். ஆனாலும் தொடர்ந்தும் அகிம்சை வழியிலும் ஜனநாயக வழியிலும் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
தமிழிழத்திற்காக போராடிய நாம் உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்காக போராடுகின்றோம்.நாம் ஏன் இந்த சபைகளை ஆழக்கூடாது? இந்த சபைகளை பேரினவாத அரசாங்க கட்சிகளுக்கு நாம் ஏன் வழங்க வேண்டும்? மன்னார் நகரத்தில் ஆயிரக்கணக்காண மக்கள் மத்தியிலே சகல பேதங்களையும் மறந்து சகல கட்சிகளும் இன்று ஓர் அணியிலே திரண்டு நிற்கின்றோம்.
உங்களின் ஆணையினை வென்றெடுக்க இத்தேர்தலினை நீங்கள் அங்கிகரிக்க வேண்டும். உங்களின் கோரிக்கைகளை ஏற்று நாங்கள் அணைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம்.அரசாங்கத்துடன் ஏற்படும் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்து குறல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதனை இத்தேர்தல் மூலம் காட்ட வேண்டும். எதிர்வரும் 18ஆம் திகதி இந்த சபைகளை உங்களின் பிரதிநிதிகள் ஆப்போகின்றார்கள். ஆகவே அணைத்து தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து எமது பிரதிநிதிகளை வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேற்படி தேர்தல் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆந்த சங்கரி, புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேற்படி பொதுக்கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழீழத்திற்காக போராடிய நாம் தேர்தலுக்காக போராடுகின்றோம்: வினோ