பிரதமர் டீ.எம். ஜயரத்தினவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்க ஐ.தே.க. தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருப்பதாக பாராளுமன்றத்தில் பொய்யான தகவலை வழங்கி பாராளுமன்றத்தைப் பிழையாக வழிநடாத்தியதற்கு எதிராக அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஐ.தே.க. அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின் போது பிரதமர் ஜயரத்தின தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருப்பதை சான்றுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என்பதாக அவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இல்லையென்று இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவ்வாறான நிலையில் அங்கு பிரஸ்தாப முகாம்கள் இருப்பதாக பிரதமர் என்ன அடிப்படையில் தகவல்களை வெளியிட்டார் என்று கேள்வியெழுப்பியுள்ள ஐ.தே.க. வானது, நிரூபிக்க முடியாத தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பாராளுமன்றத்தை தவறாக வழிநடாத்த யாரையும் அனுமதிக்க முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

0 Responses to டீ.எம். ஜயரத்தினவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஐ.தே.க