Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் மே மாதம் சிறீலங்காவில் நடைபெறவுள்ள பாதுகாப்பு படைத்துறை மாநாட்டை புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும், யப்பானும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

எதிர்வரும் மே மாதம் 31 ஆம் நாளில் இருந்து ஜுன் மாதம் 2 ஆம் நாள் வரையிலும்பயங்கரவாதத்தை தோற்கடித்த சிறீலங்காவின் அனுபவம்என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள பாதுகாப்பு படைத்தரப்பின் மாநாட்டை புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும், யப்பானும் திட்டமிட்டுள்ளன.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 54 நாடுகளுக்கு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அழைப்புக்களை அனுப்பியுள்ளது. ஆனால் யப்பானின் சட்ட விதிகளின் பிரகாரம் அது இராணுவ விழாக்களில் கலந்துகொள்ள முடியாது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இந்த விதி அங்கு உருவாக்கப்பட்டது. அதேசமயம் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருவதால் இந்த மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to சிறீலங்காவின் பாதுகாப்பு மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா, யப்பான் முடிவு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com