Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று அரசு நிவாரணமாக வழங்கும் சீனிக்கும் மாவுக்கம் தேங்காய் எண்ணெய்க்கும் பாணுக்கும் பருப்புக்கும் பால்மா அரிசிக்கும் பச்சோந்திக் காட்டுநரித்தன நடிப்புக்கும் தமிழ்மக்களின் கொள்கையை விற்கமுடியாது என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

காலத்தால் முந்திய தமிழரின் உரிமைகள் கைநீட்டி வாங்கிடும் நிவாரண பொதியாகுமா? எத்தனை தடைகள்தான் வந்தாலும் தன்மானத் தமிழரின் உணர்வுகளை அழிக்கமுடியுமா? தாய்மண்ணின் இலட்சியம் மாறுமா? தமிழரின் அரசியல் பலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும்தான் என சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று மாலை மாசக்திபுரத்தில் வேட்பாளர் சியாம்சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் .சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்மக்கள் ஆகிய நாங்கள் எமது உரிமைப் போராட்டத்தின் கடைசிக் கட்டத்திற்கு வந்திருக்கின்றோம். எனவே ஆரோக்கியமான நேர்மையான முறையில் அரசியல் செய்யவேண்டும் என்பது எமது கோட்பாடு அதைவிடுத்து அதைத்ருவோம். இதைத்ருவோம் என்று மாற்றுக்கட்சிகள்போல நாங்கள் வாக்குறுதியளிப்பவர்கள் அல்ல ஆனால் நாங்கள் தமிழ் மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க அதற்கான உரிமையை பெற்றுத்தருவோம்.

இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நிவாரணத்தை வழங்கிவிட்டு சொல்லிக்காட்டுவது கஷடப்பட்டவனுக்கு ஒருவேளை உணவை வழங்கிவிட்டு சொல்லிக்காட்டுவது தான்.

இன்று எமது மக்களுக்கு ஒருவேளை திருப்தியாக சமைத்துச் சாப்பிட முடியாத நிவாரணத்தை வழங்கிவிட்டு தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளதுபோல மாற்றுக்கட்சிகள் போட்டிபோட்டு கூக்குரலிட்டு வருகின்றனர்.

கடந்த 30 வருட போராட்டத்தின் போது எங்களை விட்டுபோன எங்கள் ஆத்மாக்கள் மற்றும் மண்ணோட மண்ணாகப்போன அந்த மைந்தர்கள் காணாமல்போன பிள்ளைகள் கொலைசெய்யப்பட பெண்கள் இவ்வாறு கோபுரத்தில் இருந்த தமிழ்மக்கள் இன்று எல்லாவற்றையும் பறிகொடுத்ததுடன் கடந்த இறுதி சண்டையின் போது 3 இலட்சத்து 50ஆயிரம் மக்கள் உயிரிழந்து 12ஆயிரம் பிள்ளைகள் தாய் தந்தையிழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.

அப்போது இன்று வாக்கு கேட்டுவருகின்ற போது இந்த பச்சோந்திக் காட்டுநரிகள் எங்கிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட இடம் கொடுக்காதவர்கள் இன்று தமிழ் மக்களுக்கு செய்யப்பட்ட அநீதிகளையும் கொலைகளையும் மறந்து கொலை காற சதிக்கும்பல்களுடன் சேர்ந்து தமிழ்மக்களை பிரித்தாள முற்படுகின்றனர்.

எனவே மக்களே இவர்களை துரத்தியடிக்கும் நாள் 17ம் திகதி அன்று எம்முடன் உள்ள ஒரே ஒரு வாக்குரிமை ஆயுதத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சின்னத்தின் மேல் புள்ளடியிட்டு தமிழ் மக்கள் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியகூட்டமைப்பு என்றால் தமிழ்மக்கள் என சர்வதேசத்திற்கு அரசுக்கும் புரியவைக்க வேண்டிய தருணம் இதுவாகும் என்றார்.

0 Responses to பச்சோந்திக் காட்டுநரித்தன நடிப்புக்கு தமிழ் மக்களின் கொள்கையை விற்கமுடியாது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com