Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியான சத்துருக்கொண்டான் புதிய பனிச்சையடி மதகினுள் ரூபன் எனப்படும் இராசையா காந்திதாஸ் (வயது 29) என்பவரை கொலை செய்ததாக நம்பப்படும் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ரூபன் எனப்படும் இராசையா காந்திதாஸ் (வயது 29) என்பவரை கொலை செய்து பையொன்றினுள் போட்டுக் கட்டி சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புதிய பனிச்சைடி மதகினுள் போடப்பட்டிருந்த நிலையில், குறித்த சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

இக்கொலை தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி லக்ஸ்மனின் வழிகாட்டலில் குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் .சாந்தகுமார் தலைமையில் பொலிஸ் சாஜன் சி.சபேசன் (16469) சாஜன் ரூபசிங்க (30615) சுபியான் (61217) ஆகியோர் அடங்கிய குழுவினரால் மேற்கொண்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து கொலையாளிகள் நேற்று பொலிஸில் சிக்கியுள்ளனர்.

கொலைசெய்தவர்கள் என சந்தேகிக்கப்பட்டுள்ள இருவரும் ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் ஏற்ன்கனவே வேலை செய்த மட்டக்களப்பு உணவு விடுதியொன்றின் உரிமையாளரான பெண்ணின் ஏற்பாட்டில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்திற்காக கொலை செய்யப்பட்டதாக கடையில் வேலை செய்த இருவர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடை உரிமையாளர் தனது மூன்று பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டுமாயின் இவன் இருக்கக்கூடாதென நீண்டகாலமாக கூறி வந்ததுடன், இறுதியாக ஒரு இலட்சம் ரூபாய் தருகின்றேன் என்றதைத் தொடர்ந்து தாம் இவரை கொலை செய்து மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து மதகினுள் போட்டதாக மேற்படி நபர்கள் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இக்கொலை தொடர்பான விசாரணையின்போது கடையில் வேலை செய்த 13 பேரிடம் வாக்குமூலத்தை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

கொலை செய்த இருவரும் கடை உரிமையாளரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்தவர்கள் கொலை செய்யப்பட்டவரின் மோட்டார் சைக்கிளை ஏறாவூரில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்தி

0 Responses to தென் தமிழீழத்தில் இளைஞனை கொலை செய்து பையில் போட்டவர்கள் பொலிஸில் மாட்டினர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com